பிரதமர் மோடி ஆட்சியை தான் மக்கள் விரும்புகின்றர் – அமைச்சர் அனுராக் தாக்கூர் !

பிரதமர் மோடி ஆட்சியை தான் மக்கள் விரும்புகின்றர் – அமைச்சர் அனுராக் தாக்கூர் !

Share it if you like it

மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைய நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளனர்’ என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் ஜூன் 1ம் தேதி (7வது கட்டம்) தேர்தல் நடக்க உள்ளது. ஹமிர்பூர் தொகுதி மக்களை சந்தித்து, அனுராக் தாக்கூர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று பிரசாரத்தில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் மாற்றங்களை கண்டுள்ளது. பா.ஜ.க அரசின் திட்டத்தால் மக்கள் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். ஐந்து கட்ட லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைய நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளனர். கடந்த முறையை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.க வை வெற்றி பெற வைக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். ஹிமாச்சல்லில் இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *