ஸ்ரீ ராமரே போட்டியிட்டாலும், மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் –  புழல் காந்தி !

ஸ்ரீ ராமரே போட்டியிட்டாலும், மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் – புழல் காந்தி !

Share it if you like it

திமுக அமைச்சரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், கடந்த 2023 செப்டம்பர் மாதம் நடந்த மாநாட்டில், சனாதன தர்மத்துக்கு எதிராக கூறிய கருத்துகள், மக்கள் மத்தியில் இன்னும் பேசுபொருளாக உள்ளது. அதில் அவர் பேசியதாவது :- இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் சமத்துவதற்கும் சமூகநீதிக்கும் எதிரானது. எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இவ்வாறு அவர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. திராவிட மற்றும் கூட்டணி கட்சியினர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் மற்றொருவர் கூட்டணியில் இணைந்துள்ளார்.

தி.மு.க செய்தித் தொடர்பாளர் புழல் காந்தி, டைம்ஸ் நவ் சேனலில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ஸ்ரீ ராமர் பற்றி சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார் : “நான் அதை ஒற்றை வரியில் வைக்கிறேன். ராமர் இங்கு வந்து போட்டியிட்டாலும், மக்கள் அவர் காலில் விழலாம், மக்கள் தீபம் ஏற்றலாம், ஆனால் மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதுதான் திராவிட இயக்கத்தின் கீழ் உள்ள தமிழக மக்களின் பகுத்தறிவுக் கண்ணோட்டம். தி.மு.க போன்ற திராவிடவாதிகளுக்கு பகவான் ராமர் எரிச்சலை ஏற்படுத்தியவர். ஈ.வே.ராமசாமி நாயக்கர், பெரியார், கருணாநிதி முதல் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வரை, அவர்கள் தொடர்ந்து பகவான் ராமரையும், இந்து தர்மத்தையும் கேலியும், கிண்டலும் செய்து அவமதித்து வந்தனர் என்று பேசியுள்ளார். இந்த காணொளியானது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பகவான் ராமர் & சேது சமுத்திரத் திட்டம் :-

2007ல், சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் ‘வகுப்புவாத சக்திகளை’ கடுமையாக விமர்சித்த கருணாநிதி, ராமர் சேது (பாலம்) பற்றிய ‘புராணத்தை’ உதறித் தள்ளினார். அவர் குறிப்பாக கேள்வி எழுப்பினார், “இந்த ராமன் என்பவர் யார்? எந்த பொறியியல் கல்லூரியில் படித்து சிவில் இன்ஜினியரானார்? இந்த ராமர் பாலம் என்று அழைக்கப்படும் இந்த பாலத்தை அவர் எப்போது கட்டினார்? இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?”. என்று பேசினார். மேலும் ராமாயணத்தை ஒரு கற்பனைப் படைப்பு என்றும் அழைத்தார், இது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான “மோதலை” குறிக்கும் ஒரு கதை என்று கூறினார்.

பகவான் ராமருக்கு செருப்பு மாலை :-

1971ஆம் ஆண்டு, திராவிடர் கழகத்தின் சேலம் மாநாட்டின் போது, ​​ஈ.வே.ராமசாமி நாயக்கர் பகவான் ராமர் உருவப்படத்தை செருப்பால் அடித்தது மட்டுமின்றி, செருப்பால் ஆன மாலையாலும் அவமானப்படுத்தினார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பல்வேறு பதிப்புகள் உள்ளன.

திருமண நிகழ்வில் மு.க.ஸ்டாலின் ஹிந்து தர்மத்தை விமர்சித்தது :-

திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசினார். அதில் ஹிந்து தர்மத்தில் திருமணம் என்பது நாற்காலி கூட போடமாட்டார்கள். தரையில் தான் மணமக்களை உட்காரவே வைப்பார்கள். மணமக்கள் முன்பு நெருப்பை மூட்டி அதிலிருந்து புகை மண்டலம் கிளம்பி மணமக்கள் கண்களிலும் நீரை வரவழைத்து, போதாக்குறைக்கு திருமணத்திற்கு வந்தவர்களின் கண்களிலும் நீரை சிந்தி ஒரு சோகமான சூழ்நிலையில் திருமணம் நடைபெறும். அதற்கு பிறகு புரோகிதர் சில மந்திரங்களை எடுத்து சொல்வார். அதில் முப்பது முக்கோடி தேவர்களை கூப்பிடுவார். இஷ்ட அவதாரங்களை கூப்பிட்டு சில எக்ஸ்ட்ரா அவதாரங்களை அழைத்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். ஆனால் அந்த மந்திரத்தின் அர்த்தத்தை கேட்டால் நம் உடல் எல்லாம் நடுங்கும். அவ்வளவு கேவலமாக இருக்கும் என்று பேசினார்.

சமீபத்தில், திமுக தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், வரலாற்றை இடித்துவிட்டு அதற்குப் பதிலாகப் புராணக் கதைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எந்த ஒரு நாடும் தன் வரலாற்றைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும், அது வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். ராமர் பிறந்தது புராணம், இது ராமாயணத்தின் கதை. அது இலக்கியம். அவர்கள் வரலாற்றை புராணங்களுடன் மாற்ற விரும்புகிறார்கள். அதைத்தான் பா.ஜ.க. செய்கிறது என்று பேசினார்.

தமிழகத்தின் கரூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி பகவான் ராமரை பற்றி எனக்கு தெரியாது என்று அப்பட்டமாக பொய் கூறினார். டைம்ஸ் நவ் ஊடகம் ஒன்றில் நிருபர் ஒருவர் ஸ்ரீ ராமரை பற்றி கேட்ட கேள்விக்கு, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி​​,“நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் . நாங்கள் பழங்குடியினர் என்பதால் ராமரை எனக்குத் தெரியாது. நாங்கள் ‘மூதாதையர் வழிபாட்டை’ பின்பற்றுகிறோம். தமிழ்நாட்டில் யாரிடமாவது கேளுங்கள். நாங்கள் ராமர் கோயிலைப் பார்த்ததே இல்லை. வடகிழக்கு பழங்குடியினர், எஸ்சிக்கள், தலித்துகள், ஓபிசிக்கள் கூட, நாங்கள் பழங்குடியின வழிபாட்டைப் பிரார்த்தனை செய்கிறோம், அதன் அடிப்படையில் முன்னோர்களை வணங்குகிறோம்” என்று கூறினார்.

மேலும் அரசியலுக்கு வரும் வரை பகவான் ராமர் பற்றி தனக்கு தெரியாது என்று கூறிய அவர், “நான் ராமாயணம் படித்தேன், மகாபாரதம் படித்தேன், அப்படித்தான் தெரியும்” என்று தனது சொந்த அறிக்கைக்கு முரணாக கூறினார். வழிபாடு என்று வரும்போது, ​​​​தமிழர்கள் “கண்டிப்பாக முன்னோர்களை வணங்குகிறார்கள்” என்று அவர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து ஹிந்து தர்மத்தை பற்றி வன்மத்தை கக்கி கொண்டு வருகின்றனர் திமுகவினர்.

https://x.com/pallavict/status/1736291367931056611?s=20

https://x.com/ANI/status/1717429088955298016?s=20

https://x.com/tweets_tinku/status/1516418623463645188?s=20


Share it if you like it