பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உ. வாசுகி பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மத்தியகுழு உறுப்பினர், தமிழ்நாடு மாநிலக்குழுவின் செயற்குழு உறுப்பினர் மற்றும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் உ. வாசுகி. இவர், கடந்த ஆண்டு பெரியார் திடலில் நடைபெற்ற அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் 103- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர் இவ்வாறு கூறினார் :
தாங்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது என் அன்னை பெரியாரை சந்தித்த நிகழ்வுகளை எங்களிடம் கூறியிருக்கிறார். அதில் ஒன்றாக, தனது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க பெரியாரை எனது அன்னை நேரில் சென்று சந்தித்தார். அப்போது, மாப்பிள்ளை எந்த ஜாதி ( எனது தந்தையை ) என்னவென்று பெரியார் கேட்டார் என்று தோழர் சிரித்து கொண்டே கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதான் ஈ.வெ.ரா. ஜாதி ஒழித்த லட்சணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.