ஒரு ரொட்டி துண்டுக்காக சண்டையிடும் பெண்கள்!

ஒரு ரொட்டி துண்டுக்காக சண்டையிடும் பெண்கள்!

Share it if you like it

ஆப்கானில் ஒரு ரொட்டி துண்டுக்காக பெண்கள், குழந்தைகள் சண்டையிட்டு கொள்ளும் காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்குள்ள பெண்கள், பெண் குழந்தைகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஆப்கானில் நிலவும் அவலநிலையை கண்டு இந்தியா மற்றும் உலக நாடுகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. இதுதவிர, பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் பாதுகாப்பு கிடைக்க ஆப்கான் அரசு உறுதி செய்ய வேண்டும் என மோடி அரசு மற்றும் வல்லரசு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆப்கான் பெண்கள் வெளியில் நடமாட கடுமையான கட்டுப்பாடு, படிக்க தடை என ஆப்கான் பயங்கரவாதிகள் புது புது திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வருகின்றனர்.

மேலும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது மிக கடுமையான அடக்குமுறைகள் இன்று வரை மேற்கொள்ளபட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு ரொட்டி துண்டுக்காக ஆப்கான் பெண்கள் வீதியில் இறங்கி சண்டை போட்டு கொண்ட காணொளி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரம், பெண் உரிமை பற்றி பேசும் உ.பி.ஸ்கள், அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், கம்யூனிஸ்ட் தோழர்கள், ஆப்கானில் நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள் குறித்து எப்பொழுது பேசுவார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it