18 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆம், சூரிய குடும்பத்திலுள்ள முக்கிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து நிற்கின்றன.
இந்த பிரபஞ்சமே மிகவும் அதிசயமானதுதான். இதில், இன்னொரு அதிசயம் நிகழ்ந்தால் எப்படி இருக்கும். ஆம், அப்படியொரு அதிசம் தற்போது நிஜத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நமது சூரியக் குடும்பத்திலுள்ள புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய முக்கியக் கோள்கள் ஒரே நேர் கோட்டில் அணிவகுத்து நிற்கின்றன. அதுவும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. ஆகவே, இதை மிஸ் பண்ணிடாதீங்க. ஏனெனில், இப்போது விட்டால் இனி 2040-ம் ஆண்டுதான் இப்படியொரு நிகழ்வை காண முடியுமாம்.
நமது சூரிய குடும்பத்தில் மொத்தம் 9 கோள்கள் இருக்கின்றன. இதில், சனி, வியாழன், செவ்வாய், சந்திரன், வெள்ளி மற்றும் புதன் ஆகிய கோள்கள் வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து காட்சி தருவதாக கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் தெரிவித்திருக்கிறது. நேற்று துவங்கிய இந்த நிகழ்வை, இன்னும் 4 நாட்கள் வரை வானில் காணலாம் என்று தெரிவித்திருக்கும் வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானி எபினேசர், சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வானியற்பியல் ஆய்வகத்தில் இந்த நிகழ்வை கண்டுகளித்து வருக்கிறார்கள். இன்னும் 4 நாட்கள் இந்த நிகழ்வை காண முடியும். ஆகவே, ஆய்வகத்திற்கு சுற்றுலா பயணிகள் வரலாம் என்று எபினேசர் தெரிவித்திருக்கிறார்.
வானில் சூரியனுக்கு மேல் நேர்கோட்டில் இந்த கிரகங்கள் அணி வகுத்து நிற்கும். சுற்று வட்டப் பாதையில் ஒவ்வொரு கோளும் மற்றொரு கோளில் இருந்து பல பில்லியன் கிலோ மீட்டர்கள் தள்ளி இருக்கும். ஆனால், இதை நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியுமா என்கிற சந்தேகம் எழும். தாராளமாக பார்க்கலாம். சூரிய உதயத்திற்கு முன்பும், சூரியன் அஸ்தமனமான பிறகும் இந்த நிகழ்வை பார்க்கலாம். வடக்கு அரை கோளத்தில் வசிப்பவர்களாக இருந்தால், சூரிய உதயத்திற்கு 45, 90 நிமிடங்களுக்கு முன்பு இந்த நிகழ்வை பார்க்கலாம். சூரிய உதயம் ஆகிவிட்டால், கண்களுக்கு தெளிவற்ற நிலையில் கோள்கள் தென்படும்.