உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த பிரிக்ஸ் மாநாட்டு புகைப்படம்.!
வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஆசிய, ஐரோப்பிய நாடுகள் என உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டுக்கு ஏற்றவாறு பல்வேறு அமைப்புகளை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. அவ்வப்பொழுது உச்சி மாநாடுகளை நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன. முக்கிய் பிரகடனங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த அமைப்புகள் நடத்தும் மாநாடுகளும் அவற்றில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது இன்றளவும் கேள்விக்குறியானதே. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கு தலைமை ஏற்ற காலம் தொட்டு இந்தியா, அங்கம் வகிக்கும் அமைப்புகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் போர், தீவிர தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து துணிச்சலுடன் கருத்து தெரிவித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, போரை தவிர்த்து அமைதி நிலை நாட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எதிர் துருவத்தில் உள்ள நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசும் ஆற்றல் இந்திய தலைவர்களுக்கு மட்டுமே இதுவரை இருந்துள்ளது… இருந்து வருகிறது.
அந்த வகையில் சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருகிறார்.
சீன அதிபரை இந்தியாவிற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது இந்திய வரலாற்றில் முக்கிய அத்தியாயம்.
தற்போது நிலவும் ரஷ்யா- உக்ரைன் எப்படியேனும் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியும்,. இந்தியாவும் அளித்த பங்களிப்பு உலகறியும். உக்ரைன்-ரஷ்யா இடையே போர் உக்கிரத்தில் இரு ந்த நேரத்தில் இரு நாட்டு தலைவர்களை சந்தித்து அமைதியை வலியுறுத்தினார் பிரதமர். இதன் தொடர்ச்சியாகவே ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய ஏற்படுத்தி தாக்கம் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற 16- வது பிர்க்ஸ் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி , ரஷ்யா, சீனா ஈரான் அதிபர்களை சந்தித்து பேசி இருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி சீனா அதிபரை சந்தித்து பேசி உள்ளது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரிக்ஸ் மாநாட்டு தலைவர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, போருக்கு எதிரான இந்தியாவின் கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளார் .
இந்த ஆளுமையே இந்திய பங்கேற்றுள்ள அமைப்புகளை சர்வதேச அளவில் உயர்த்தியுள்ளது. 16 – வது பிரிக்ஸ் மாநாட்டு உலகத் தலைவர்கள் குறிப்பாக, மேற்கத்திய நாட்டு தலைவர்களால் உற்று நோக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் சீன அதிபர் ஜி.ஜின்பிங் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளதுடன் பல்வேறு முக்கிய செய்திகளையும் சொல்லி இருக்கிறது.