‘ரோஜ்கார் மேளா திட்டம்’ பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர்

‘ரோஜ்கார் மேளா திட்டம்’ பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர்

Share it if you like it

நாடு முழுவதும் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்புப் பணி நியமனங்கள் மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ‘ரோஜ்கார் மேளா’ என்ற திட்டத்தை பிரதமர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணி நியமான ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ‘ரோஜ் கார் மேளா’ திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 51,106 பேருக்கு பிரதமர் இன்று ( திங்கட்கிழமை) கானொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த பணி நியமனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான கடிதங்கள் நேரடியாக வழங்கப்பட்டன.


Share it if you like it