பிரபல சிகையலங்கார நிபுணர் மற்றும் நேச்சுரல்ஸ் சலூனின் தலைமை நிர்வாக அதிகாரியான சி.கே. குமரவேல் என்பவர் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வீர சாவர்க்கரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு தேசியவாதிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பினை தெரிவித்து சமூக வலைதளமான எக்ஸ் பதிவில் #BoycottNaturals ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
அந்த பதிவில், சுதந்திர போராட்ட தியாகியான வீர சாவர்க்கரை ஒரு கோழை, என்றும், காந்தியை கொலை செய்ததில் இவரும் ஒரு கூட்டு சதிகாரர் என்றும், கருணை மனுக்களை எழுதுவதில் வல்லவர் என்றும், மனநலம் பாதிக்கப்பட்ட கோட்சேவை காந்தியை கொலை செய்ய மூளை சலவை செய்தவர் என X வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வீர சாவர்க்கரின் பேரில் மட்டும்தான் வீரம் உள்ளதே தவிர, அவருக்குள் வீரம் எதுவும் இல்லை” இந்துத்துவா வெறியை தவிர. இவ்வாறு சி.கே.குமரவேலின் வீர சாவர்க்கரை இழிவு செய்யும் செய்யும் சமூக வலைதள பதிவானது நாடு முழுவதும் உள்ள தேசியவாதிகள் மத்தியில் பெரும் கோபத்தை எழுப்பியுள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் தேசியவாதிகள் நேச்சுரல்ஸ் சலூனை புறக்கணித்து #BoycottNaturals ஹேஷ்டேக்கை நேற்று டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
நேச்சுரல்ஸ் சலூன் தலைமை நிர்வாக அதிகாரி குமரவேலின் பின்னணி :-
2004 ஆம் ஆண்டு சென்னையில் முதன் முதலில் நேச்சுரல்ஸ் சலூனை சி.கே. குமரவேல் மனைவி திருமதி.வீணா அவர்கள் தொடங்கி வைத்தார். தற்போது நேச்சுரல்ஸ் சலூன் நாடு முழுவதும் சுமார் 750க்கும் மேற்பட்ட சலூன்களை நடத்தி வருகிறது. அவர்களின் பெரும்பாலான கிளைகள் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன, ஆனால் மெதுவாக அவர்கள் உத்தரபிரதேசம், புது டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் பிற வட இந்திய மாநிலங்களில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் மும்பை, கோலாப்பூர், சோலாப்பூர், சாங்லி மற்றும் நாக்பூரில் நேச்சுரல்ஸ் கிளைகளைக் கொண்டுள்ளது.
சி.கே.குமரவேல் திமுவுடன் தொடர்பு :-
சி.கே. குமரவேல் தற்போது நேச்சுரல் சலூனின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். குமரவேல் திமுக மற்றும் திராவிட சித்தாந்தத்தின் மிக தீவிரமான ஆதரவாளர். சமூக ஊடகங்களில் அவரது பெரும்பாலான பதிவுகள் மற்றும் மறுபதிவுகள் பிரதமர், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக தான் உள்ளன. குமரவேல் அடிக்கடி தேசியவாதியான வீர சாவர்க்கரை இந்துத்துவா மதவெறியர் என்று குறிப்பிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார். பின்னர் குமரவேல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து,2021 வரை கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். இதனை அடுத்து 2021-ல் குமரவேல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார். சி.கே. குமரவேல் திமுகவின் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. சி.கே. குமரவேலின் சகோதரர் சி.கே. ரங்கநாதன். இவர் கவின்கேர் என்கிற நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இவர் மறைந்த முன்னாள் திமுக தலைவரான கருணாநிதியின் பேத்தியை திருமணம் செய்தவர். சமீப காலமாக, குமரவேல் இண்டி கூட்டணி மற்றும் ராகுல் காந்தியை ஆதரித்து சமூக வலைதள பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
சி.கே. குமரவேல் கிறிஸ்த்துவ மிஷனரி ஜெகத் காஸ்பர் ராஜ் உடனான தொடர்பு :-
சி.கே. குமரவேல் ஒரு உறுதியான திராவிடப் ஆதரவாளர் மட்டுமல்ல, ஜெகத் காஸ்பர் ராஜ் போன்ற கிறிஸ்துவ மிஷினரிகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டவர். ஜெகத் காஸ்பர் ராஜ் விடுதலைப் புலி இயக்கத்திற்கு நிதி திரட்டி கொடுத்தவர். மேலும் 2006 ஆம் ஆண்டு புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (FBI) ஜெகத் காஸ்பர் ராஜுக்கு எதிராக விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் குற்றப்பத்திரிகையை வெளியிட்டது. சமீபத்தில் ஜெகத் காஸ்பர் ராஜ், தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களை,தி ரைஸ் என்ற தனது அமைப்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள தமிழ் தொழிலதிபர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். ஜெகத் காஸ்பர் ராஜ் வணிக மாநாட்டை நடத்தி வருவதாவும், அதில் சி.கே. குமரவேல் முக்கிய அங்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு முக்கிய வர்த்தகரான சி.கே. குமரவேல் என்பவர் சுதந்திர போராட்ட தியாகியான வீர சாவர்க்கருக்கு எதிராக இப்படி ஒரு மூர்க்கத்தனமான ட்வீட்டை பதிவிடுவார் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரது சமூக ஊடக பதிவுகளை பார்க்கும்போது, சி.கே. குமரவேல் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி மற்றும் பிரதமர் மோடியை வெறுப்பது மட்டுமின்றி, பாரதிய அடையாளங்களையும் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வெறுக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் ஹிந்து எதிர்ப்பு தெரிவிக்கும் திராவிட குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு மற்றும் திராவிட சித்தாந்தத்துடன் அவர் இருந்த தொடர்பினால் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
கடந்த காலங்களில் நேச்சுரல் சலூனுக்குச் சென்ற பல தேசியவாதிகளின் உணர்வுகளை சி.கே. குமரவேல் அவர்களின் இந்த ட்வீட் புண்படுத்தியுள்ளது. இதனால் தேசியவாதிகள் சமூக வலைதளமான எக்ஸ் பதிவில் #BoycottNaturals ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர். தொடர்ந்து நேச்சுரல் சலூனுக்கு சென்று வரும் பலரும் தான் இனி நேச்சுரல் சலூனுக்குச் செல்ல மாட்டேன் என உறுதிமொழி எடுத்துள்ளனர். இதனால் நேச்சுரல் சலூனுக்கு இது ஒரு பெரிய சவுக்கடியாக இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.