பிரான்ஸ் நாட்டில் பயங்கர கலவரம் நடந்து வரும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் ஒரு முஸ்லீமைக் கூட எங்களது நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. ஆகவே, எங்கள் நாடு அமைதியாக இருக்கிறது என்று போலந்து நாட்டு அதிபர் கூறியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் வாகன சோதனையின்போது நிறுத்தாமல் சென்ற அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த 17 வயது முஸ்லீம் சிறுவனை, அந்நாட்டு போலீஸார் சுட்டு தடுத்து நிறுத்தினர். இதில், அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டில் பெரும் கலவரத்தை தூண்டி விட்டிருக்கிறது. இன ரீதியாக இக்கலவரம் வெடித்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இக்கலவரத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் முஸ்லீம்கள் என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது. இக்கலவரத்தில் அந்நாட்டின் 830 வருடங்கள் பழமை வாய்ந்த நூலகம் உட்பட முக்கியமான இடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில்தான், நாங்கள் முஸ்லீம்களை உள்ளே விடவில்லை. இதனால், எங்கள் நாடு அமைதியாக இருக்கிறது என்று போலந்து நாட்டு அதிபர் கூறியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரான்ஸ் நாட்டில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவிடம் பேட்டி எடுத்தது. அப்போது, போலந்து நாட்டில் எத்தனை அகதிகள் இருக்கிறார்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு, ஒருவர் கூட இல்லை என்று அதிபர் பதிலளிக்க, இதை நீங்கள் பெருமையாகக் கருதுகிறீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
நீங்கள் என்னிடம் கேட்டால், ஒரு முஸ்லீம், ஒரு சட்ட விரோத புலம் பெயர் நபர்கள் கூட போலந்தில் இல்லை. அதேசமயம், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 2 லட்சம் பேர் இங்கு அமைதியாக வேலை செய்கிறார்கள். ஆனால், சட்ட விரோதமாக ஒரு முஸ்லீமைக் கூட உள்ளே விடவில்லை என்றார். அதற்கு, நீங்கள் ஒரு அகதிக்குக் கூட அடைக்கலம் கொடுக்கவில்லை. ஆகவே, நீங்கள் ஒரு இனவெறி பிடித்தவர் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே என்று செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அதிபரோ, அப்படியே இருக்கட்டும். எனினும், மக்கள் எங்களது அரசிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்காகத்தான் மக்கள் எங்களது அரசை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மேலும், இதன் காரணமாகத்தான் எங்களது நாடு உலகிலேயே அமைதியான நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது. அதோடு, போலந்து நாடு பாதுகாப்பாகவும் இருக்கிறது. இதன் காரணமாகவே, போலந்து நாட்டில் ஒரு பயங்கரவாத தாக்குதல்கூட நடக்கவில்லை. எங்களது நாட்டின் நகர வீதிகளை பாருங்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறது என்று. ஆகவே, என்னை தேசியவாதி என்று அழைத்தாலும் சரி, இனவெறி பிடித்தவர் என்று அழைத்தாலும் சரி, நான் கவலைப்படப் போவதில்லை. எனக்கு எனது குடும்பமும் எனது நாடும்தான் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, சட்ட விரோத குடியேற்றம், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து உலகிற்கு ஒரு பாடத்தை புகட்டி வருகிறது.