நேற்று கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத். ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற ரவுடி கருக்கா வினோத் என்பவனை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவனிடமிருந்து மேலும் மூன்று குண்டுகளை பறிமுதல் செய்தது காவல்துறை. இந்நிலையில் ஆளுநரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை !
Share it if you like it
Share it if you like it