ஓடி போன மனைவியை சேர்த்து வைக்குமாறு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்த முன்னாள் கணவர்கள்.
தமிழ் திரை உலகின் நகைச்சுவை மன்னனாக வலம் வருபவர் வடிவேல். இவரது, நகைச்சுவை காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவரது, படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் சாதாரண மனிதர்களின் இயல்பு வாழ்க்கையோடு ஒத்து போய்விடுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. அந்தவகையில், மருதமலை படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி உண்டு. அதாவது, கழுத்தில் மாலை அணிந்து கொண்டு ஒரு காதல் ஜோடி காவல் நிலையத்திற்கு வந்து வடிவேலுவிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டி முறையிடுவார்கள். இதையடுத்து, வடிவேலு விசாரணை செய்து கொண்டு இருக்கும் பொழுது அப்பெண்ணிற்கு ஏற்கனவே மூன்று திருமணம் நடைபெற்று இருப்பது தெரியவரும் இப்படியாக அந்த நகைச்சுவை காட்சி அமைந்து இருக்கும். அதை போன்றதொரு சம்பவம் ஒன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே வசித்து வருபவர் குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கொத்தனார் ஒருவரை காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து, பைபர் தொழில் செய்து வரும் நபருடன் கடந்த 2020- ஆம் ஆண்டு ‛மிஸ்டுகால்’ மூலம் ஒருவருடன் குமாரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்தவகையில், 2-வதாக அந்த நபரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் அவரோடு வாழ்ந்து விட்டு தனது பெற்றோரை பார்த்து விட்டு வருகிறேன் என தனது கணவரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து, குமாரி மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஒருவருடன் குமாரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாட்கள் செல்ல செல்ல அது கள்ளகாதலில் வந்து முடிந்துள்ளது. இதனிடையே, தனது 2 வது கணவருக்கு மஸ்கோத் அல்வா கொடுத்து விட்டு மூன்றாவது நபருடன் கம்பி நீட்டிய சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, தனது மனைவியை மீட்டு தருமாறு இரண்டு கணவர்களும் பரோசா காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.