தமிழகத்திற்கு ஹிந்து அறநிலையத்துறை தேவையற்றது என முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் உலக சிவனடியார்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், மதுரை ஆதீனம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் மற்றும் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். இதயைடுத்து, மாஜி அதிகாரி பேசும் போது இவ்வாறு கூறினார் ;
தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது. பக்தர்கள் உண்டியல்களில் பணத்தை போடாதீர்கள். வாழ்வாதாரமின்றி வறுமையில் தவிக்கும் அர்ச்சகர்களின் தட்டில் பணத்தை போடுங்கள். ஆண்டவன் தான் அதிகாரிகளுக்கு பிச்சை போட வேண்டும். அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ ஆண்டவனுக்கு பிச்சை போட முடியாது. கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து அரசு அதிகாரிகளின் பெயர்களை உடனே நீக்க வேண்டும்.
சென்னை அருங்காட்சியகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட புராதானமான சுவாமி சிலைகள் உள்ளன. அச்சிலைகளை, ஆகம விதிபடி மீண்டும் அதே கோவில்களில் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை, செய்யுமாறு அரசாங்கத்திற்கு நாம் மனு கொடுக்க கூடாது. அது தெய்வத்தை இழிவுப்படுத்துவது போல அமைந்து விடும். அரசே முன்வந்து இதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜ.ஜி. பொன்மாணிக்கவேல் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ;
நான் மரணிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஆண்டவன் எனக்கு சக்தி கொடுத்தால் ஒன்று திருக்கோயில்கள், இரண்டாவது செப்பு திருமேனிகளை காப்பாற்றுவது, மூன்றாவது அர்ச்சகர்கள். அதற்கு அடுத்து, 2,500 தெய்வ விக்ரகங்கள் மியூஸியத்தில் காட்சி பொருளாக வைத்து அரசாங்கம் சம்பாரிப்பது கேவலமான தொழில். இந்த விக்ரகங்களை அந்தந்த கோவில்களில் சென்று வைக்க வேண்டும். இதுபோக, 3,50,000 தெய்வ விக்ரகங்களை இன்று வரை பதிவு செய்ய முடியாமல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.
இவர்கள், எல்லாம் தகுதியில்லாதவர்கள். அந்த விக்ரகங்கள் எல்லாம் அனாதையாக கிடக்கிறது என்று தனது உள்ள குமுறலை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.