திராவிட மாடல் தமிழ் வார்த்தையா? கவர்னர் தமிழிசை பொளேர்!

திராவிட மாடல் தமிழ் வார்த்தையா? கவர்னர் தமிழிசை பொளேர்!

Share it if you like it

திராவிட மாடல் என்பது தமிழ் வார்த்தையா? முதலில் திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என்று தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார் புதுச்சேரி மற்றும் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன். நேற்று கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நெல்லை விருந்தினர் மாளிகைக்கு திரும்பிய தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “புயலால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக புதுச்சேரியில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டது. முதல்வர் ரெங்கசாமி, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். நானும் தொலைபேசி வாயிலாக கேட்டிருந்தேன். நல்ல முன்னேற்பாடு காரணமாக பல பாதிப்புகள் தடுக்கப்பட்டிருக்கிறது.

புயலால் பலர் வீடுகளை இழந்திருக்கிறார்கள், வாகனங்களை இழந்திருக்கிறார்கள். உயிரிழப்பு இல்லாமல் எடுக்கப்படும் நடவடிக்கைதான் சிறப்பான பணி. மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை. இந்தியா உலகத்திற்கு ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, என்னை கிரண் பேடியோடு ஒப்பிட்டு பேசி வருகிறார். மற்றவர்களுடன் என்னை ஒப்பிட நான் விரும்புவது இல்லை. கவர்னர் பணியைத்தான் செய்கிறேன் அரசியல்வாதியாக செயல்படவில்லை. மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேனா என்பது குறித்து தற்போது பதிலளிக்க முடியாது.

தமிழகத்தில் மாண்டஸ் புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும், மற்ற மாநில ஆட்சி குறித்தும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. ஆனாலும், உயிரிழப்பு இல்லாமல் காத்திருப்பது அவசியம். இதை எடுத்துரைக்க திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்தி இருக்க வேண்டும். மாடல் என்பது தமிழா? அவர்கள் என்ன சொன்னாலும் அது தமிழ் வார்த்தை ஆகிவிடுமா? திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஹய்யோ ஹய்யோ!


Share it if you like it