நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் விழுப்புரம் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு 4,77,033 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற து.இரவிக்குமார் திமுக அமைச்சர் பொன்முடி மனைவியின் காலில் விழும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விசிக எம்பியை ட்ரோல் செய்து வருகின்றனர்.
