பாரதப் பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய நடிகர் பொன்வண்ணுக்கு, நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு. இந்நிறுவனம், தொடர் இழப்பு, மறுசீரமைப்பு மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் செலவீனங்களை கருத்தில் கொண்டு, இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து இருக்கிறது. இம்முடிவிற்கு முழுக்க முழுக்க அந்நிறுவனமே காரணம் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து தொழிற்சாலையை மூடப்போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இதனிடையே, பிரபல நடிகை சரண்யாவின் கணவர் பொன்வண்ணன் கூறியதாவது; இன்று ஃபோர்டு தொழிற்சாலையை மூடி விட்டார்கள். நேற்று முழுவதும் நான் சென்டிமென்டாக ரொம்ப வருத்தப்பட்டேன். அந்நிறுவனத்தின், கடைசி காருக்கு மாலைகள் போட்டு ஊழியர்கள் அழுகிறார்கள். அந்த, காருடன் அனைத்து ஊழியர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இதுகுறித்து, பேசும் போது எனக்கு உடம்பு சிலிர்க்கிறது. லட்ச கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு தொழிற்சாலையை விட்டு வெளியேறிய கார். ஆனாலும், அந்த கடைசி காரை வழியனுப்பும் போது, அத்தனை தொழிலாளிகளும் கண்ணீர் விட்டு அழுததையும் பார்த்தேன். ஒரு ஜனாதிபதியை வழியனுப்பும் போது அவர் கையெடுத்து கும்பிட்டதை நிராகரித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த புகைப்படத்தையும் நான் பார்த்தேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.
உண்மை என்னவென்பதை குறித்து முழுமையாக ஆராயாமல், தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பது போல தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போல சிரிப்பு நடிகர் பொன்வண்ணன் உளறி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விடியல் ஆட்சியில், நிகழும் கொலைகள், கொள்ளைகள் மற்றும் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு குறித்து இவர் எப்போது பேசுவார் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.