கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட ஏழை,எளியவர்களுக்கு, தேவையான மருத்துவ உதவிகள், உணவு, உடை, என்று. ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, மற்றும் இன்னும் பிற தொண்டு நிறுவனங்கள். தங்களால் இயன்ற உதவிகளை இன்று வரை வழங்கி வருவதை அனைவரும் நன்கு அறிவர்.
மேற்கூறிய நபர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்காமல். வெறும் வெற்று விளம்பரம் தேடும் தி.மு.கவிற்கு. நீயூஸ் 7 போன்ற பிரபல ஊடகங்கள் அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருவது மக்களில் கடும் கோவத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.
25 வருடம் தி.மு.கவின் கோட்டையாக இருந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு எந்த ஒரு வளர்ச்சியையும் கொடுக்காத தி.மு.கவை கண்டிக்காமல். உதயநிதி ஸ்டாலின் அத்தொகுதியின் எம்.எல்.ஏ ஆன பின்பு. அவருக்கு முட்டு கொடுக்கும் விதமாக நீயூஸ் 7 இன்று வரை செயல்பட்டு கொண்டு இருக்கும் நிலையில்.
நாட்டிலேயே கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை முதலமைச்சர் ஒருவர் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை என்று மிகப் பெரிய கப்ஸா கதையை நீயூஸ் 7 கூறியுள்ளது.
கொரோனா தொற்று கடுமையாக பாதித்த நோயாளிகளை கோவா முதல்வர், சிக்கிம் முதல்வர், தெலுங்கானா முதல்வர், என்று பலர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ள நிலையில். தமிழக மக்களுக்கு உண்மையை கூறாமல், கொரோனா தொற்று நோயாளிகளை நேரில் சந்தித்த, நாட்டிலேயே ஒரே முதல்வர் என்று நீயூஸ் 7 கூறுவது கடும் கண்டனத்திற்குறியது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.
சில நாட்களாக தமிழக ஊடகங்களின் நிலை pic.twitter.com/5IehNg1ens
— திண்டுக்கல் அலாவுதீன் (@AlaudeenSyed7) May 28, 2021