பா.ஜ.க தலைவர் கேள்விக்கு பதில் சொல்ல தி.மு.க.விற்கு திராணி இருக்கிறதா? – பிரேமலதா காட்டம்!

பா.ஜ.க தலைவர் கேள்விக்கு பதில் சொல்ல தி.மு.க.விற்கு திராணி இருக்கிறதா? – பிரேமலதா காட்டம்!

Share it if you like it

தமிழக முதல்வர் துபாய் பயணம் மேற்கொண்டதை பற்றி பா.ஜ.க தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தி.மு.க.விற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக தனது குடும்பத்துடன் அண்மையில் துபாய் பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த பயணம் தமிழகத்திற்கு தேவையான முதலீடுகளை கொண்டு வருவதற்காக என சொல்லப்பட்டது. அந்த வகையில், பிரபல வார பத்திரிக்கையான ஜீனியர் விகடன். துபாய்க்குச் சென்ற 5,000 கோடி அமைச்சர்களை கண்காணிக்கும் ராஜ்பவன் என்று செய்தி வெளியிட்டு இருந்தது. இது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் முதல்வர் பயணம் குறித்து விமர்சனம் செய்து இருந்தன. இதையடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர் தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது, பத்திரிக்கையில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி 5,000 கோடி ரூபாயின் மர்மம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சிப்பதா? அண்ணாமலை உடனே மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிடில் 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என தி.மு.க மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தமிழக பா.ஜ.க தலைவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தி.மு.க கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தி.மு.க.வின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்… துணிவுடன். மக்கள் துணையுடன் என்று பதிலடி கொடுத்து இருந்தார்.

மேலும், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று ஆளும் கட்சிக்கு சவால் விடுத்து இருந்தார் என்பதை தமிழகம் நன்கு அறியும். அந்தவகையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க தலைவர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என அவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

Image
Image


Share it if you like it