எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அய்யய்யே இவரா ஜனாதிபதி வேட்பாளர் என்று முகம் சுளிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது. ஆகவே, ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்களது வேட்பாளரை தேர்வு செய்வதில் முனைப்புக்காட்டி வருகின்றன. பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த சில தினங்களாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோரிடம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால், மூவருமே போட்டியிட மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகுவதாக அறிவித்த யஷ்வந்த் சின்ஹா, எதிர்க்கட்சிகளின் கரத்தை வலுப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தார். இந்த சூழலில், யஷ்வந்த் சின்ஹாவையே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவித்திருக்கிறது எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் குழு. டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த யஷ்வந்த் சின்ஹா, வெளியுறவுத்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் என்றாலும், அவரது புரொஃபைல் படுமோசமாக இருப்பதுதான் அரசியல் பார்வையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சாமானிய மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அதாவது, விவாதங்களின்போதும் சரி, கோவம் தலைக்கேறிய நிலையிலும் சரி, யஷ்வந்த் சின்ஹா ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தக் கூடியவர் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதோடு, இதுவரை யஷ்வந்த் சின்ஹா பயன்படுத்திய ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச செய்கைகள் அடங்கிய பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆகவே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, படுதோல்வியடைவது உறுதி என்கிறார்கள்.
இதனிடையே, யஷ்வந்த் சின்ஹா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, தனது ஆபாச பதிவுகள் மற்றும் செய்கைகள் அடங்கிய பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைக் கண்டு அவற்றை அவசர அவசரமாக டலிட் செய்து வருகிறார். எனினும், சிலர் ஸ்கீன் ஷாட் எடுத்த வைத்த பதிவுகள் இதோ…