கொரோனா தொற்று பிரேசில் அதிகமாக பரவி வந்த கட்டத்தில் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, “பகவான் ராமரின் சகோதரரான லக்ஷ்மணனைக் காப்பாற்ற புனித மருந்தை இமாலயத்திலிருந்து பகவான் அனுமான் எடுத்து வந்தார்.
அதேபோல தற்போது கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பிரச்சினையை இந்தியாவும் பிரேசிலும் இணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறும்,” என்று கடிதம் எழுதியதோடு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பாரதப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்..
இதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா கண்டுபிடித்த பிறகு.. பிரதமர் மோடியிடம் உடனே மருந்து வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து இருந்தார்… இதனை அடுத்து இந்தியா அந்நாட்டிற்கு கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது.. இதற்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவிக்கும் விதமாக ஆஞ்சநேயர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..
கொரோனா தடுப்பு மருந்தை தனது நட்பு நாடுகளுக்கு இந்தியா இலவசமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
Namaskar, Prime Minister @narendramodi
Brazil feels honoured to have a great partner to overcome a global obstacle by joining efforts.
Thank you for assisting us with the vaccines exports from India to Brazil.
Dhanyavaad! धनयवाद
— Jair M. Bolsonaro (@jairbolsonaro) January 22, 2021