தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் மருமகளும் தி.மு.க எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமாரின் மனைவியுமான சமூக ஆர்வலர் மெர்சி செந்தில்குமார் அண்மையில் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அக்காணொளியில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். நாமும் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன். நமக்கு எல்லாம் வீடு, குழந்தைகள் என ஒரு வட்டம் இருக்கிறது. நமக்கான ப்ரீ டைமில் தான் சமூக சேவை செய்ய முடிகிறது.
பாதிரியார்கள், சிஸ்டர்களுக்கு நாம் என்ன மரியாதை கொடுக்கிறோம்? ஒரு பாதிரியார் (ஸ்டேன் சுவாமி) இறந்துவிட்டார். இன்று 200 பேர் குரல் கொடுப்பார்கள். நாளையும் ஒரு பாதிரியாரும் சிஸ்டரும் எங்கோ ஒரு இடத்தில் போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். கல்வியும் பகுத்தறிவும் பாதர்ஸும் சிஸ்டர்ஸும் வந்த பின்னர் தான் நமக்கு கிடைத்தது.
பள்ளி, கல்லூரிகளில் அரசியலும் சட்டமும் சொல்லித்தரப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பாதிரியார்கள், சிஸ்டர்கள் கைகளில் உள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் துறவறம் பற்றியும் சொல்லி கொடுங்கள்.
துறவிகளாக வாழ்வது மிகப் பெரிய கடினமானது. உலகத்தில் இருக்கிற பாதிரியார்கள், சிஸ்டர்களை ஹீரோ ஹீரோயின்களைப் போல பார்க்க வேண்டியது அவசியம். இன்னொரு சட்டத்தை கொண்டுவரனும்னு தோணுது. இனிமே இந்த உலகத்துல எவனாக இருந்தாலும் ஒரு பாதரையோ சிஸ்டரையோ அரெஸ்ட் பண்ணனும்னா வாடிகனில் போப் ஆண்டவரிடம் கேட்கனும். போப் ஆண்டவரிடம் கேட்காம அரெஸ்ட் பண்ணக் கூடாதுனு சட்டம் கொண்டுவரனும்.