கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி இரவு 8 மணியளவில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிட பணிகளை நேரடியாக ஆய்வு செய்தார். அந்த புகைப்படங்கள் வெளியான சிறிது நேரத்தில் மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பை பெற்றாலும் எதிர்க்கட்சியினர் மற்றும் சில தமிழக போராளிகள் தொடர் ஆய்வு என்றால் புகைப்படங்கள் எப்படி வெளியானது. பிரதமர் தன்னுடன் எப்பொழுதும் ஒரு புகைப்பட கலைஞரை வைத்து கொண்டே சுற்றுகிறார். மோடி ஒரு விளம்பர பிரியர் என்றெல்லாம் மக்களை குழப்பினர்.
ஆனால் சொந்த வாயில் சூனியம் வைத்துக்கொண்டது போல் ஒரு நிகழ்வு தமிழக போலி போராளிகளுக்கு நடந்துள்ளது. ஆம் நேற்று அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் முதல்வர். சம்பவ இடத்தில் வேறெந்த ஊடகமும் இல்லாத நிலையில் கலைஞர் தொலைக்காட்சி மட்டும் சரியாக அந்த இடத்திற்கு வந்தது எப்படி என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரதமரோ, முதல்வரோ ஒரு முக்கிய பிரமுகர் பொதுவெளியில் பயணிக்கிறார் என்றல் கண்டிப்பாக அதன் புகைப்படங்கள் வெளியாக தான் செய்யும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல பிரதமர் மீது சேற்றை வாரியிறைத்த புரட்சி பூனைகள் தற்பொழுது திருடனுக்கு தேள்கொட்டியது போல் மௌனமாக இருக்கின்றனர்.