கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: கூடாரத்தில் இருந்த ராமருக்கு பிரமாண்ட கோயிலை பிரதமர் மோடி கட்டியுள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை. ஊழல்வாதிகளை சிறையில் அடைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தோம். ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க கூடாதா?. கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ.,மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது. நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அனுப்புவதில் மாநில அரசு தாமதம் காட்டுகிறது. லோக்சபா தேர்தலில் ஒரு பக்கம் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடுகிறது. மறுபுறம் ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் ஈடுபட்டு வரும் இண்டியா கூட்டணியினர் போட்டியிடுகின்றனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.