தம்மை பின்பற்றுவோர் மற்றும் ஆதிபராசக்தி கோயில் பக்தர்களால் அம்மா என்று அன்போடு அழைப்படுபவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார். இவர் நேற்று மாரடைப்பால் காலமானார். பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு வருகின்றனர். இன்று தமிழக முதலைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. மனித குலத்துக்கு செய்த சேவைக்காக மத்திய அரசு பங்காரு அடிகளாருக்கு 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிரதமர் மோடியும் பங்காரு அடிகளாருக்கு அவரது புகைப்படத்தை பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவு விதைகளை விதைத்தார். அவரது பணி தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் பல அரசியல் தலைவர்களும் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பங்காரு அடிகளார் மறைவிற்கு இரங்கலை தெரிவித்த பிரதமர் மோடி !
Share it if you like it
Share it if you like it