நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது. 7-வது கட்ட தேர்தலுக்கான மனுத்தாக்கல் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் நாளை வாரணாசி தொகுதிக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பிரம்மாண்ட வாகனப்பேரணியில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து 14 ஆம் தேதி அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன. வாரணாசிக்கு வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி மக்களவைத் தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்று பாஜக நகரத் தலைவர் வித்யாசாகர் ராய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, மே 13-ம் தேதி அந்தத் தொகுதியில் மோடி ரோட்ஷோ நடத்துவார். ரோட்ஷோவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ராய் கூறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் வாரணாசி தொகுதி எம்பியாக பிரதமர் மோடி பதவி வகித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 4 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.