டெல்லி-காசியாபாத்-மீரட் இடையேயான பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்ஆர்டிஎஸ்) நடைபாதையின் முன்னுரிமைப் பிரிவை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தரபிரதேசத்தின் சாஹிபாபாத் ரேபிட்எக்ஸ் நிலையத்தில் திறந்து வைத்தார்.
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC), ஏப்ரல் மாதம் RRTS ரயில்களுக்கு ‘RAPIDX’ என பெயரிட்டது. என்சிஆர்டிசி இந்தியாவின் முதல் அரை-அதிவேக பிராந்திய ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்துகிறது. RRTS என்பது ஒரு புதிய இரயில் அடிப்படையிலான, அரை-அதிவேக, உயர் அதிர்வெண் கொண்ட பயணிகள் போக்குவரத்து அமைப்பாகும், இது 180 kmph வடிவமைப்பு வேகம் கொண்டது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி RRTS ரயில்கள் ‘நமோ பாரத்’ என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்திய ரயில்வே ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘வந்தே பாரத்’ — அரை அதிவேக ரயில்களை இயக்கி வருகிறது.
மற்றொரு பதிவில்,அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “180 கிமீ வேகம் மற்றும் 160 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது, மற்றும் முழு குளிரூட்டப்பட்ட, பாதுகாப்பான மற்றும் வசதியான ரயில் டெல்லி மற்றும் மோடிபுரம் இடையே 82 கிமீகளை கடக்க ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.
தில்லி-காசியாபாத்-மீரட் வழித்தடமானது ரூ.30,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது, மேலும் காசியாபாத், முராத்நகர் மற்றும் மோடிநகர் ஆகிய நகர்ப்புற மையங்கள் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்துடன் டெல்லியை மீரட்டுடன் இணைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.