மார்ச் 8 ஆம் தேதியான இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நம் இல்லத்து அரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், நாம் அன்றாடம் உபயோகிக்கும் எல்பிஜி சிலிண்டரின் விலையை 100 ரூபாய் குறைந்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
இன்று, மகளிர் தினத்தையொட்டி, எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது நாரி சக்திக்கு பயனளிக்கும்.
சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு ‘எளிதாக வாழ்வதை’ உறுதிசெய்வது என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது.