ஜேம்ஸ் டிமோன் என்பவர் அமெரிக்க வங்கியாளர் மற்றும் அமெரிக்காவை சார்ந்த பிரபல தொழிலதிபர் ஆவார். இவர் ஜேபி மோர்கன் சேஸின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து இவர் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
நியூயார்க்கின் எகனாமிக் கிளப் நடத்திய நிகழ்வில் செவ்வாய்க்கிழமை பேசும் போது டிமோன் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். இவர் பிரதமர் மோடி மற்றும் மோடி அரசின் செயல்பாடுகளை பாராட்டினார்.
ஜேம்ஸ் டிமோன் பேசியதாவது :-
பிரதமர் ‘மோடி இந்தியாவில் நம்பமுடியாத வேலையைச் செய்துள்ளார். அவர் 40 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளார்’ என்று டிமோன் கூறினார்.
நம்மால் நம்பமுடியாத கல்வி முறையை இந்தியர்கள் பெற்றுள்ளனர். நம்பமுடியாத உள்கட்டமைப்பு இந்தியாவில் உள்ளது, இந்தியா பல மடங்கு இன்று உயர்ந்துள்ளது. இதற்கு ஒரே காரணம் பிரதமர் மோடி தான். ஏனென்றால் இந்த ஒரு மனிதன் மிகவும் கடினமான உழைப்பாளி. இவர்போல் யாராலும் இருக்க முடியாது.
சமீப காலங்களில் பிரதமர் மோடி இந்தியாவில் மேற்கொண்ட சீர்திருத்தங்களையும் அவர் பாராட்டினார். இதுமட்டுமல்லாமல் 70 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குகளைத் திறந்து வைத்துள்ளார். நாட்டில் தலைவிரித்தாடும் ஊழலை ஒழித்துள்ளார். நாட்டின் மறைமுக வரி விதிப்புக்கு பாராட்டு தெரிவித்தார்.
பழைய அதிகார அமைப்புகளை உடைக்க வலிமை வேண்டும். அந்த வலிமை பிரதமர் மோடியிடம் உள்ளது. பிரதமர் மோடி வலிமையான தலைவர். இவ்வாறு பேசியுள்ளார்.