காவிரி நதிநீர் பங்கீட்டு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :-
காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு, 1924 ஆம் ஆண்டு, 50 ஆண்டுகளுக்குப் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை 1974 ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி புதுப்பிக்கத் தவறிவிட்டார். இந்த வரலாற்றுப் பிழையால் அப்போது முதல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சிக்கல் நீடித்து வந்தது. காமராஜர் ஆட்சி செய்த போது காவிரிக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. எப்போது திமுக ஆட்சி அமைந்ததோ அப்போது தான் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகிய அணைகள், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசால் கட்டப்பட்டன.
இவர்களுக்கு மாநில நலனை விட எப்போதும் குடும்ப நலனே முக்கியம். 2007 ஆம் ஆண்டு, 12 திமுக கூட்டணி அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தும், காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில், இந்தத் தீர்ப்பை வெளியிடத் தவறியவர் கருணாநிதி. 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு இடையே இருந்த காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டவர் பிரதமர் மோடி அவர்கள்.