பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஜி 20 ல் இந்தியாவின் தலைமைத்துவத்தை பாராட்டி ஸ்டான்போர்டின் யுஎஸ்-ஆசியா தொழில்நுட்ப மேலாண்மை மையமானது (யுஎஸ்-ஏடிஎம்சி) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“முதலீடுகளை எளிதாக்குதல், குறிப்பாக தனியார் நிதி, காலநிலை நிதி மற்றும் உலகளாவிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (DPI) அளவிடுதல் ஆகியவற்றை எளிதாக்குவதன் மூலம், G20 நிலையான வளர்ச்சி மற்றும் புதுமைக்கான பாதையை நோக்கி நகர்ந்துள்ளது”.
இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், ஜி 20 இல் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைந்திருப்பது, மன்றத்தில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துகிறது. G20 இப்போது உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80% ஐ உள்ளடக்கியது, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 88.5% ஆகும், மேலும் உலக வர்த்தகத்தில் 79% ஐப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
.பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் ஜி 20 இன் இந்தியாவின் தலைமைத்துவத்தை, வரலாற்றில் மிகவும் உள்ளடக்கியதாக இந்த அறிக்கை பாராட்டுகிறது. “உலகளாவிய உள்ள நாடுகள் உலகளாவிய வளர்ச்சியை உந்துகின்றன என்ற கருத்துக்கு இந்தியா தலைமை தாங்கியது. ஆப்பிரிக்க யூனியனை G20 இன் நிரந்தர உறுப்பினராக சேர்ப்பது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.
ஜி 20 போன்ற நிகழ்வுகளில் இந்தியாவின் சாதனைகள், பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு மன்றங்களில் நாட்டின் உயர்ந்த நிலை மற்றும் அதிக செல்வாக்கை பிரதிபலிக்கின்றன, மேலும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு வாழ்க்கைத் துறையிலும் இந்தியர்களின் வலுவான உலகளாவிய பொது நன்மைக்கு பங்களிக்கின்றன. பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்கான பங்களிப்பாக, உலகில் உலகளாவிய நன்மைக்கான சக்தியாக இந்தியா விளங்குகிறது என்று இன்று உலகளாவிய அங்கீகாரம் உள்ளது. G20 உச்சி மாநாடு உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பொருளாதாரங்களை ஒன்றிணைப்பது குறிப்பிடத்தக்கது.
G20 மாநாட்டில் உறுப்பினராக மட்டும் இருந்த நமது நாடு பிரதமர் மோடி தலைமையில் தற்போது அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கி நின்று பெருமை சேர்த்தது.
இவ்வாறு ஒருபுறம் பிரதமர் மோடி நமது நாட்டிற்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார். மறுபுறம் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவருடைய செயல்பாட்டினால் தமிழகமே ஸ்டாலின் தலைமையின் கீழ் தலைகுனிவு கொள்கிறது. காரணம், கடந்த ஆண்டில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றதாக கடையில் வாங்கிய கோப்பையைக் காட்டி, முதலமைச்சர் ஸ்டாலினை மாற்றுத்திறனாளி வீரர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழசெல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வினோத் பாபு, தன்னை சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் என உள்ளூரில் வலம் வந்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி லண்டனில் 20 நாடுகள் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது தலைமையில் பங்கேற்ற இந்திய அணி , இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றதாக கூறியுள்ளார்.
பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணிக்காக கோப்பையை வென்றதாக கூறி உலா வந்த வினோத் பாபுவை ஊர்மக்கள் கொண்டாடியுள்ளனர். பின்னர் கோப்பையுடன் அமைச்சர் ராஜகண்ணப்பனைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். தனது தொகுதியைச் சேர்ந்த வினோத்பாபு இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருப்பதாக கருதி, வினோத்பாபுவை முதலமைச்சரிடம் அழைத்துச் சென்று வாழ்த்து பெற்றிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில் தான் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது என வினோத் பாபு கூறியது எல்லாமே பொய் என சென்னை தலைமைச் செயலகத்திற்கு புகார் வந்துள்ளது. இதுதொடர்பான உளவுத்துறையின் விசாரணையில், புகாரில் தெரிவித்து இருப்பது அனைத்தும் உண்மை என தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான விசாரணையில் “இந்தியாவில் மேற்கு வங்கம், ஜான்பூரில் நடந்த உள்ளூர் கிளப்பில் வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார். அங்கே இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவதுபோல் வீடியோ எடுத்து, தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் பாகிஸ்தானில் விளையாடியதாக கூறி நம்ப வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியுள்ளார். தன்னுடைய அணி என அவர் அளித்த இந்திய அணியினரின் பெயர் பட்டியல் போலியானது என்பதோடு, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட பாகிஸ்தானுக்குச் செல்வதாக கூறி பல தனியார் நிறுவனங்களிடம் பணம் வசூலித்திருப்பதும்” தெரிய வந்துள்ளது. அதோடு, அமைச்சர் ராஜகண்ணப்பனையும் நேரில் சந்தித்து உதவி கேட்டு, வினோத் பாபு பணம் வாங்கியுள்ளார்.
அரசு வேலை வாங்குவதற்காக இந்த ஏமாற்று வேலையை வினோத்பாபு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அவருடைய செயல்பாடுகள் மற்றும் கோப்பையை பார்த்தாலே வினோத் பாபு உண்மைத்தன்மை இல்லாத, போலியான நபர் என தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
விசாரிக்காமலே முதலமைச்சர் வரை அழைத்துச் சென்றிருப்பது , அதிர்ச்சியாக இருக்கிறது. மோசடி நபர் ஒருவர் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டு, எந்த ஒரு அச்சமும் இன்றி தலைமை செயலகத்திற்கே வந்து முதலமைச்சரை சந்தித்து சென்ற சம்பவம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி பெரும் சர்ச்சை ஆனது .
இந்த சம்பவமானது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. இதேபோல் சிஏஏ க்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின் பொது மேடையில் பேசும்போது தமிழகத்தில் சிஏஏ கொண்டுவரப்படும் என்று பேசுகிறார். அதன் பின் அவரது மகன் உதயநிதி எழுந்து வந்து தப்பாக பேசுகிறீர்கள், சிஏஏ தமிழகத்தில் கொண்டுவர படாது என்று சொல்லுங்கள் என்றவுடன் மாற்றி பேசினார் ஸ்டாலின். ஆக துண்டு சீட்டில் என்ன உள்ளதோ அதை அப்படியே படிக்கும் பொம்மை முதல்வராக தான் ஸ்டாலின் இருக்கிறார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். ஆனால் அதற்கு காரணம் கேட்டால் திமுகவினருக்கே தெரிவதில்லை.
இவர்களுக்கு பிரதமர் மோடியை பிடிக்காது. அதனால் பிரதமர் மோடி மக்களுக்காக எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். வரும் தேர்தலிலாவது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.