பிரதமர் மோடியின் தலைமையால் உலகின் பொருளாதார வளர்ச்சியில் மிக உயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார்.
ரஷ்ய மாணவர் தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மாணவர்களுடன் அதிபர் புடின் கலந்துரையாடினார். அப்போது, “உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வளர்ச்சி கொண்ட நாடு இந்தியா. இதற்கு தற்போதைய பிரதமர் மோடியின் தலைமைப் பண்புகள்தான் காரணமாகும்.
பிரதமர் மோடியின் தலைமையில்தான் இந்தியா இத்தகைய வேகமான வளர்ச்சியை எட்டி இருக்கிறது. சர்வதேச அரங்கில் தங்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று உறுதி அளிக்கப்பட்டிருப்பதால், இந்தியா மற்றும் அதன் தலைமையை ரஷ்யா நம்பியிருக்க முடியும். இந்தியாவை நம்பகத்தன்மை கூட்டாளியாக ரஷ்யா கருதுகிறது.
இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்கிறது. இன்றைய உலகில் இது எளிதான விஷயம் அல்ல.150 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா இதை செய்வதற்கு உரிமை இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் உரிமை நிறைவேற்றப்பட்டு வருகிறது.