கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் 3 நாட்கள் தவமிருந்த பாறையில் பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள், 45 மணி நேரத்துக்கு தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார். இதையொட்டி, 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்களவை இறுதிகட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன, மக்களவை தேர்தல் முடியும் நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக, 45 மணி நேரம் தியானம் செய்ய உள்ளார்.
( கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறை, அன்னை பகவதியம்மன் ஒற்றைக்காலில் தவமிருந்த இடம் ஆகும். அம்மனின் பாதச்சுவடு தற்போதும் அங்கு உள்ளது. இங்கு கடந்த 1882-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் சுவாமி விவேகானந்தர் தவம் இருந்தார். விவேகானந்தரின் ஆன்மிக வாழ்க்கையில் இதுவே முக்கிய திருப்புமுனையாக அமைந்தது)
இந்த பாறையில்தான் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தியானம் செய்ய வசதியாக அங்கு தியானக்கூடம் அமைந்துள்ளது. இங்கு பிரதமர் தியானம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு இன்று மாலை 3.55 மணிக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு 4.35 மணி அளவில் வருகிறார். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு, மாலை 5.30 மணி அளவில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்கிறார். விவேகானந்தர் பாறைக்கு செல்லும் வழியில், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி ஜூன் 1-ம் தேதி மாலைவரை, தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு மேல் தியானம் மேற்கொள்கிறார். ஜூன் 1-ம் தேதி மாலை 3 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், தியானக் கூடத்தில் இருந்து வெளியே வருகிறார். பிறகு, மாலை 3.30 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.
இந்நிலையில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி நாளை (மே 30) முதல் 3 நாட்கள் தியானம் செய்யவுள்ள நிலையில், திமுக குமரி மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தலைமையில் புதன்கிழமை மாலை கட்சியின் வழக்கறிஞர் அணியினர், குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீதரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், ‘7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி மே 30-ம் தேதி முதல் பாஜக வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கில் வாக்காளர்களை கவர்வதற்காக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்து விளம்பரப்படுத்த அனுமதித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
மேலும், இதுபோன்ற தேவையற்ற விளம்பரத்தால் பொதுமக்களுக்கும், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பிரதமர் மோடிக்கு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ள வழங்கியிருக்கும் அனுமதியை தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரப்போகிறார் என்று சொன்னாலே திமுக காங்கிரஸ் தலைவர்கள் அலறுகின்றனர். பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜகவை கால் பதிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டி இருக்கிறார். அதனால் தான் அவர் பார்வையை தமிழ்நாட்டுக்கு பக்கம் திருப்பி உள்ளார்.தமிழ்நாட்டு மக்களும் தற்போது பிரதமர் மோடியை அவர் தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலம் பிரதமரை ஆதரிக்க தொடங்கிவிட்டனர். இதனால் மனம் பொறுக்க முடியாத திராவிட கட்சியினர் பலூன்களில் கோ பேக் மோடி என எழுதி பறக்கவிடுவது என அலப்பறையை செய்து வருகின்றனர்.
மேலும் பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தேர்தல் பிரசாரங்களின் முடிவில் பிரதமர் ஆன்மிக பயணங்களை மேற்கொள்வது வழக்கம். தங்குகிறார். 2019 இல், அவர் கேதார்நாத்துக்குச் சென்றிருந்தார், 2014 இல் அவர் சிவாஜியின் பிரதாப்காட் சென்றிருந்தார். தற்போது மே 30-ம் தேதி கன்னியாகுமரி வந்து ஜூன் 1-ம் தேதி வரை விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய போகிறார். இதில் என்ன தவறு உள்ளது. இதற்கு ஏன் திமுகவும் காங்கிரசும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.