தேசிய படைப்பாளிகள் விருது’ வழங்கும் விழா டெல்லியில் நடைப்பெற்றது. அவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று விருதுகளை வழங்கினார். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த ‘தேசிய படைப்பாளிகள் விருது’களை வெற்றியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) வழங்கினார். நாட்டின் வலிமை மற்றும் கலாசாரத்தை சர்வதேச அளவில் பரப்ப உதவியவர்கள், பசுமை சாம்பியன்கள், தூய்மை தூதர்கள், வேளாண் படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்ப படைப்பாளிகள் என சுமார் 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
அப்போது கீர்த்திகா கோவிந்தசாமி என்பவருக்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். அப்போது, அந்த பெண், பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார். பதிலுக்கு பிரதமர் மோடியும் அப்பெண்ணின் காலை மூன்று முறைத் தொட்டு வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ‘சிறந்த கதை சொல்பவர்’ விருதை பெற்ற கீர்த்திகா கோவிந்தசாமி, தமிழகத்தை சேர்ந்தவர். அவர், வரலாற்று தகவல்களை யூடியூப் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது..
https://x.com/Gujju_Er/status/1765970350364594645?s=20