கொரோனா தொற்று இந்தியாவில் மிக தீவிரமாக இருந்த காலகட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க, வி.சி.க, காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஊடகங்கள், கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை மிக தீவிரமாக பின்பற்றும் அயல் நாட்டு ஊடகங்கள் வரை பாரதப் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பல்வேறு கடும் விமர்சனங்களையும், பொய் செய்திகளையும் இன்று வரை பரப்பி வருகின்றனர்.
அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் நட்பு நாடுகள், வல்லரசு நாடுகள், மற்றும் ஏழை நாடுகளுக்கு, இந்தியா கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது மட்டுமில்லாமல் நமது உள்நாட்டு தேவைகளையும் மத்திய அரசு பூர்த்தி செய்து வருகிறது. 40 கோடி தடுப்பூசிகளை ஜூலை மாதத்திற்குள் இந்திய மக்களுக்கு போடுவதற்கு வாய்ப்பே இல்லை என பிரபல நாளிதழ் ஹிந்து அண்மையில் தெரிவித்து இருந்தது.
ஆனால் பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஜூலை மாதத்திற்குள்ளாகவே 40 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி ஒட்டு மொத்த உலக நாடுகளையுமே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்து சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.