பிரதமர் மோடியின் 74 வது பிறந்தநாள் : வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள் !

பிரதமர் மோடியின் 74 வது பிறந்தநாள் : வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள் !

Share it if you like it

தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, இன்று (செப்.17) தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, பிரதமர் மோடி புவனேஸ்வரில் 26 லட்சம் பிஎம் ஆவாஸ் யோஜனா வீடுகளை திறந்து வைக்கிறார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு :- பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் ஆளுமை, பணி வலிமையால், நீங்கள் அசாதாரணமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளீர்கள். நாட்டின் செழிப்பையும், மதிப்பையும் உயர்த்தி உள்ளீர்கள். தேச உணர்வோடு உங்களின் புதுமையான முயற்சிகள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வழி வகுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி: நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில், அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழ்நாட்டு மக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச் சங்கமம், நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனைகள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்புமிகுந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: பிரதமர் நரேந்திர மோடி இன்று 74ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு நான் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வலிமை ஆகியவற்றுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்: பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்; உங்களில் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் அவர் வாழ வேண்டும்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் :- சுதந்திர இந்தியாவின் சாதனை நாயகன், உலகத் தலைவர் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்…!

இன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்த நாள்.

சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர்.

12 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில முதலமைச்சராக இருந்து பிரதமரானவர்.

இந்தியாவை உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உயர்த்தியவர்.

சுதந்திர நூற்றாண்டை கொண்டாடும் 2047ம் ஆண்டில் இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்கும் இலக்குடன் செயல்பட்டு வருபவர்.

தொடர்ந்து மூன்று முறை மக்களவைத் தேர்தலில் வென்று பிரதமரானவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு. அவருக்குப் பிறகு தொடர்ந்து மூன்று முறை மக்களவைத் தேர்தலில் வென்று பிரதமராகி, நேருவின் சாதனையை சமன் செய்திருப்பவர்.

‘காங்கிரஸ் – காங்கிரஸ் எதிர்’ என்றிருந்த இந்திய அரசியலை, ‘பாஜக – பாஜக எதிர்’ என்று மாற்றிக் காட்டியவர்.

சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 10 ஆண்டுகளில் ‘வீடுகள் தோறும் கழிப்பறை’, ‘வீடுகள் தோறும் சமையல் எரிவாயு இணைப்பு’, ‘வீடுகள்தோறும் குழாய் மூலம் குடிநீர்’, ‘வீடுகள்தோறும் மின் இணைப்பு’, ‘அனைவருக்கும் வங்கிக் கணக்கு’ போன்ற அடிப்படை வசதிகள் சாத்தியமாகியவர்.

கிராமச் சாலைகள், நெடுஞ்சாலைகள், அதிவிரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், சுரங்க சாலைகள், புதிய ரயில் பாதைகள், சரக்கு ரயில்களுக்கென தனி பாதைகள், புதிய விமான நிலையங்கள், வந்தே பாரத், தேஜஸ் போன்ற அதிவிரைவு ரயில்கள், புதிய துறைமுகங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என உலகம் வியக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து நிலைகளிலும் உறுதிப்படுத்தியவர்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் அமைப்பு அதிகாரத்தை பெற்றுத் தந்தவர்.

தொழில்துறையில் குறிப்பாக உற்பத்தி துறையில் இந்தியாவை வளர்ச்சி பாதையில் செலுத்திக் கொண்டிருப்பவர்.

‘தேசம் முதலில், அடுத்து கட்சி, கடைசியில் தனி நபர்’ (Nation First, Party Next, Self Last) என்ற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் கொள்கை வழி நடப்பவர்.

குடும்ப அரசியல் நடக்கும் இந்தியாவில் தேசத்தின் 140 கோடி மக்களையும் தான் குடும்பமாக்கிக் கொண்டவர்.

‘உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழியே’ என்று உலக அரங்குகளில் பிரகடனப்படுத்தி, நம் அன்னைத் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்.

77 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், 55 ஆண்டுகள் இந்தியாவை தன் கட்டுக்குள் வைத்திருந்த நேரு குடும்பத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாமல் தடுத்து நிறுத்தியவர்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா என்று உலகின் வல்லரசு நாடுகளின் தலைவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உலக தலைவர்களில் முதலிடம் பெற்றிருப்பவர்

உலகமே இரு பிரிவாகி, ஒரு பிரிவு ரஷ்யாவை ஆதரிக்கிறது. இன்னொரு பிரிவு யுக்ரைனை ஆதரிக்கிறது. ஆனால், இருநாட்டு தலைவர்களுக்கும் நண்பராய், இருவரையும் சந்தித்து உலக சமாதானத்திற்கு உழைத்துக் கொண்டிருப்பவர்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து, இந்தியாவில் உள்நாட்டு பயங்கரவாதத்தை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்தியவர்.

நடக்கவே நடக்காது, சாத்தியமே இல்லாத ஒன்று என்று எல்லோராலும் கூறப்பட்ட காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோவில் ஆகியவற்றை சாத்தியமாக்கிய சாதனையாளர்.

‘அரசியல் அதிகாரமே உண்மையான அதிகாரம்’ என்பதை உணர்ந்து, பெண்கள், பட்டியலினத்தோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் அதிகமான இடமளித்து, அவர்களுக்கு அரசியல் அதிகாரம் அளித்தவர்.

சுதந்திர இந்தியாவின் சாதனை நாயகன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நாட்டுக்காக கடினமாக உழைக்கும், தேசத்திற்காக ஒவ்வொரு மணித்துளியையும் செலவழிக்கும் நரேந்திர மோடியின் வழியில் நாட்டுக்கு உழைப்போம். தேசத்தை உலகின் முதன்மை நாடாக்குவோம்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *