‘நிகான்’ கேமராவில் ‘கெனான்’ மூடி… பிரதமரை கலாய்த்த மூடர்கூட்டத்துக்கு ‘நோஸ்கட்’!

‘நிகான்’ கேமராவில் ‘கெனான்’ மூடி… பிரதமரை கலாய்த்த மூடர்கூட்டத்துக்கு ‘நோஸ்கட்’!

Share it if you like it

பிரதமர் மோடி போட்டோ எடுப்பதை போட்டோஷாப் மூலம், கேமரா மூடியுடன் இருப்பதுபோல மார்பிங் செய்து வெளியிட்ட மூடர்கூட்டம், உண்மை அம்பலமானதால் அசிங்கப்பட்டு நிற்கிறது.

பாரத பிரதமர் மோடி தனது 72-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை, மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் திறந்து விட்டார். அப்போது, சிறுத்தைக் குட்டிகளை பிரதமர் மோடி போட்டோ எடுத்தார். பொதுவாகவே, பிரதமர் மோடிக்கு போட்டு எடுப்பது மிகவும் பிடித்தமானது. ஆகவே, வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும் சரி, உள்நாட்டில் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போதும் சரி, பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது கேமராவில் தானே படம் பிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில்தான் குனோ தேசியப் பூங்காவிலும் சிறுத்தைகளை போட்டோ எடுத்தார்.

ஆனால், இந்த போட்டோவை சில விஷமிகள் போட்டோஷாப் மூலம் மார்பிங் செய்தனர். அதாவது, பிரதமர் மோடி வைத்திருக்கும் கேமரா மூடியுடன் இருப்பதுபோல மார்பிங் செய்து, மூடி இருக்கும் கேமராவில் எப்படி போட்டோ எடுக்க முடியும்? எல்லாம் போட்டோ ஷூட்டுக்காக என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல் செய்தனர். குறிப்பாக, இந்த படத்தை முதலில் பகிர்ந்தது மேங்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். இதை உண்மை என்று நம்பி, தமிழகத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் பிரதமரை பிடிக்காத கூட்டமும், எதிர்க்கட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கிண்டல் செய்தன.

இதையடுத்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க. தொழில்நுட்பப் பிரிவு, அது போட்டோஷாப் புகைப்படம் என்பதை கண்டுபிடித்தது. அதோடு, பிரதமர் கையில் இருக்கும் கேமரா நிகான் கம்பெனி வகையைச் சேர்ந்தது என்பதையும், போட்டோஷாப் மூலம் மார்பிங் செய்யப்பட்ட படத்தில் கேமராவின் மூடி கெனான் கம்பெனி வகையைச் சேர்ந்தது என்பதையும் கண்டுபிடித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதமர் வலது கையில் வாட்ச் கட்டியிருப்பது போலவும், இடது கையால் போட்டோ எடுப்பதுபோலவும் போட்டோவை சித்தரித்திருந்ததையும் கண்டறிந்தனர். இதையடுத்து, பா.ஜ.க. தொழில்நுட்ப பிரிவினர், பிரதமரின்உண்மையான படத்தையும், போட்டோஷாப் படத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, உண்மையை அம்பலப்படுத்தினர். இதனால், மார்பிங் படத்தை உண்மை என நம்பி பதிவிட்ட மூடர்கூட்டம் அசிங்கப்பட்டு நிற்கிறது.


Share it if you like it