மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் !

மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் !

Share it if you like it

மூத்த குடிமக்கள் புகார் அளித்த அன்றே, அவர்களின் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகளை அனுப்பி, பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் சென்னை காவல் ஆணையரின் அணுகுமுறை வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட அனைத்து வகையான குற்றச்செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

மேலும், பொது மக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும், மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவுறுத்தி உள்ளார். இதை நடைமுறைப்படுத்தும் வகையில், புதன்கிழமைதோறும் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்படும் மூத்தகுடிமக்களின் புகார் மனுக்களை காவல் ஆணையரே நேரில் பெற்றுக் கொள்கிறார். அதோடு நின்றுவிடாமல், புகார் அளிக்கும் மூத்த குடிமக்களின் காவல் எல்லைக்குட்பட்ட காவல் துணை ஆணையரை, புகார் அளித்தவர்களின் வீட்டுக்கே அனுப்பி பிரச்சினைகளின் முழு விபரத்தையும் கேட்டு உடனடி தீர்வு காண செய்கிறார்.


Share it if you like it