காவல் சீருடையில் விவசாயிகளை செருப்பால் அடித்து விடுவேன் என்று மிரட்டிய சார்பு ஆய்வாளர் !

காவல் சீருடையில் விவசாயிகளை செருப்பால் அடித்து விடுவேன் என்று மிரட்டிய சார்பு ஆய்வாளர் !

Share it if you like it

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலுருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சரக்கு வாகனத்தில் பூக்களை ஏற்றி சென்றனர். இதனை தொடர்ந்து சரக்கு வாகனம் பரவை சோதனை சாவடிக்கு அருகே வந்த போது சார்பு ஆய்வாளர் தவமணி வாகனத்தை தடுத்து நிறுத்தி சரக்கு வாகனத்தில் பூக்களை எதற்காக ஏற்றி வந்தீர்கள் ? சரக்கு வாகனத்தில் வரக்கூடாது என கூறி விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நாங்கள் வழக்கமாக எப்போதும் சரக்கு வாகனத்தில் தான் பூக்களை ஏற்றி வந்து விற்பனை செய்து வருகிறோம் என்று விவசாயிகள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த சார்பு ஆய்வாளர் தவமணி, விவசாயிகள் என்றும் பாராமல் காவல் சீருடையில் இருந்துகொண்டு மிகவும் ஆபாசமாக கொச்சையாக பேசியது மட்டும் இல்லாமல் செருப்பை கொண்டு அடிப்பேன் என்று தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து விவசாயிகள் சார்பு ஆய்வாளர் தவமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வந்த நிலையில் சார்பு ஆய்வாளர் தவமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாநகர காவல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறும் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையினர் அவர்களின் அதிகாரத்தினை ரவுடிகளிடம், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளிடம் காட்டமாட்டார்கள். அதனைவிட்டு அன்றாடம் வேலை செய்து சம்பாதிக்கும் பாமர மக்களான விவசாயிகளிடம் தான் அதிகார திமிரை காட்டுவார்கள். அதுவும் விவசாயிகளை செருப்பால் அடித்து விடுவேன் என கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் மற்ற எந்த போலீசாரும் இதுபோல் நடக்காதவண்ணம் இருக்குமாறு நடவ்டிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *