கமல்ஹாசன், வெற்றிமாறனுக்கு சவுக்கடி பதில்!

கமல்ஹாசன், வெற்றிமாறனுக்கு சவுக்கடி பதில்!

Share it if you like it

ராஜ ராஜ சோழன் என்ன மதம் என்பது தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அதுகுறித்து பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். இதையடுத்து பேசிய அவர், திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்த விளைவு தான், தமிழ்நாடு இன்று வரை மதசார்பற்ற மாநிலமாக இருந்து வருகிறது. நடுவில் இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் இல்லாமல் இருந்தது. இப்போது, திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்துள்ளது. வள்ளுவருக்கு காவி உடை அணிவது ஆகட்டும். ராஜ ராஜ சோழன் ஒரு ஹிந்து அரசனாக காட்ட முயற்சி நடைபெறுகிறது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, வெற்றிமாறன் கருத்திற்கு கடும் விமர்சனங்கள் எழ துவங்கியது. இதனை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டவர்கள் வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஸ்ரீனிவாசன் திரைப்பட நடிகர் கமல் மற்றும் வெற்றிமாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அக்காணொளியில் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது ; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ ராஜ சோழன் என்ன ஜாதி என்று ஆராய்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது. ஆனால், இப்போ அவர் எந்த ஜாதி என்ற விவாதம் போய் இப்போ அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் ஹிந்துவா இல்லையா என்று பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். ராஜ ராஜ சோழனும், வள்ளலாரும், ராம கிருஷ்ண பரமஹம்சரும் ஹிந்து தர்மத்தை காப்பாற்ற வந்த மகான்கள். இப்போ, நாம் அவர்களை ஹிந்துவாக காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தமிழக அரசாங்கம் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய திருவள்ளுவரின் புகைப்படத்தில் விபூதி பூசப்பட்டு இருந்தது. இப்போ, செக்குலர் திருவள்ளுவராக மாறி இருக்கிறார். விபூதி பூசப்பட்ட திருவள்ளுவரை தான் இலங்கையில் இன்று கொண்டாடுகிறார்கள். இன்று தமிழ்நாட்டு தமிழர்கள் மழுங்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல, வள்ளலாருக்கும் இதே நிலை வந்து விடகூடாது என்று பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it