பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது. அந்த வகையில் அந்த மாநிலத்தில் ஹோட்டல்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் மது விற்பனை செய்யவும், மது அருந்தவும் தடைவிதிக்கப்பட்டது. பார் லைசென்ஸ்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. முதல்வர் நிதிஷ் குமாரின் இந்த அறிவிப்புக்குப் பெண்கள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் 2016 ஆம் ஆண்டில் மது மீதான தடையால், பீகாரில் தினசரி மற்றும் வாராந்திர முறையில் குடிப்பவர்கள் மீதான வழக்கு என மொத்தம் 24 லட்சம் வழக்குகளும் மற்றும் குடித்துவிட்டு வன்முறை, கலவரம் ஏற்படுத்துவது என 21 லட்சம் வழக்குகள் தடுக்கப்பட்டுள்ளன என்று தி லான்செட் ரீஜியனல் ஹெல்த் — தென்கிழக்கு ஆசிய இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
மேலும் இந்தத் தடையால் பீகாரில் உள்ள 18 லட்சம் ஆண்கள் அதிக எடை அல்லது பருமனாக மாறுவதைத் தடுத்து உள்ளது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், வறுமை, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து பிரிவு, அமெரிக்காவில் உள்ளவர்கள் உட்பட ஆராய்ச்சியாளர்கள் குழு, தேசிய மற்றும் மாவட்ட அளவிலான சுகாதாரம் மற்றும் குடும்ப ஆய்வுகளின் தரவை பகுப்பாய்வு செய்தது.
“மதுவிலக்குக்கு முன், பீகாரில் ஆண்கள் அடிக்கடி மது அருந்துவதை 9.7 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்தது, அண்டை மாநிலங்களில் இது 7.2 சதவீதத்தில் இருந்து 10.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.”
“மதுவிலக்குக்கு பிறகு, இந்த போக்குகள் தலைகீழாக மாறியது, பீகாரில் குறைந்தபட்சம் வாரந்தோறும் மது அருந்துவது 7.8 சதவீதமாகக் குறைந்தது, அண்டை மாநிலங்களில் இது தொடர்ந்து 10.4 சதவீதமாக அதிகரித்தது.
மதுவிலக்கினால் பீகாரில் பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறைகள் குறைந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். உணர்ச்சி வசப்பட்டு வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் 4.6 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் 3.6 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறினர்.
மதுவிலக்கினால் ஆண்களின் ஆரோக்கியத்தில் எடை குறைந்த ஆண்களின் வழக்குகள் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதிக எடை அல்லது பருமனான ஆண்களின் வழக்குகள் 5.6 சதவீத புள்ளிகளால் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்தத் தடையானது 2.4 மில்லியன் வழக்குகள் அடிக்கடி மது அருந்துவதையும், 1.8 மில்லியன் ஆண்களிடையே அதிக எடை/உடல் பருமன் மற்றும் 2.1 மில்லியன் வன்முறை வழக்குகளையும், மதுவிலக்கினால் பீகார் மாநிலம் தடுத்துள்ளது.
மற்ற மாநிலங்களிளும் இதுபோன்று மதுவிலக்கை அமல்படுத்தினால் அதன் முடிவுகள் நன்றாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும். ஆனால் திமுக அரசு நடைமுறைப்படுத்தாது. ஏனெனில் பாதுபானத்தில் தான் தமிழக அரசு அதிக லாபம் பார்த்து வருகிறது. அப்படி இருக்கையில் அக்கா கனிமொழி மதுவிலக்கை அமல்படுத்துவாரா ?
திமுக எம்.பி.யும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார், தேர்தலுக்கு
பிறகு தேர்தல் அறிக்கையில் நாங்கள் மதுவிலக்கு பற்றி கூறவே இல்லை என மாற்றி மாற்றி பேசுகிறார்.