மோடி அரசின் 7 ஆண்டு சாதனை (பகுதி – 4) – தலைநிமிர்ந்த மகளிர்

மோடி அரசின் 7 ஆண்டு சாதனை (பகுதி – 4) – தலைநிமிர்ந்த மகளிர்

Share it if you like it

பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டம்

பெண்கள் என்பவர் ஒரு வீட்டின் தூண்கள் மட்டும் அல்ல அவர்கள் நாட்டின் கண்கள். அப்படிப்பட்ட பெண்களை முன்னேற்ற பாதையில் வளர்ச்சி அடைய பல நல உதவி திட்டங்களான பேட்டி பச்சாவ், பேட்டி படாவ், மகிளா சக்தி கேந்திரா, உழைக்கும் பெண்களுக்கான விடுதி திட்டம், செல்வ மகள் திட்டம், முத்தலாக் தடை சட்டம், பெண் மாணவிகளுக்கான கல்வி சிறப்புத் திட்டம் போன்ற திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் நம்முடைய பாரத பிரதமர் நரேந்தி மோடி ஆவார். மேடி அவர்களின் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளைத் தடுத்து அதற்கான கடுமையன சட்டத் திட்டங்களை வகுத்தார். பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகளைச் செய்யும் கயவர்களுக்கு சட்டப்படி தண்டனைகள் வழங்க பல சட்ட திட்டங்களை கொண்டு வந்தார்.

பெண் சிசு கொலைகளை முற்றிலுமாக தடுக்க பல திட்டங்களை வகுத்தார். அதில் முக்கியமான திட்டம் செல்வமகள் (சுகன்யா சம்ரிதி) சிறுசேமிப்புத் திட்டத்தினை தொடங்கினார். இதில் பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்தோ (அ) 10 வயதிற்குள் இச்சிறுசேமிப்பு திட்டத்தை தொடங்கலாம்.

இத்திட்டத்தை அஞ்சல் அலுவலகத்தில்தான் தொடங்கமுடியும். ரூ. 250 செலுத்தி அஞ்சல் கணக்கைத் துவக்கலாம். இதற்கு கொடுக்கப்படும் வட்டிவிகிதம் 7.6 சதிவீதமாக வழங்கப்படுகிறது. அந்த பெண் குழந்தைகளுக்கு 21 வயதில் கணக்கை முடிக்கும் போது அவர்கள் சேமித்த தொகையிலிருந்து 3 மடங்கு அதிக தொகை கிடைக்கிறது. அந்த பெண்ணுக்கு 24 வயது ஆகும் போதோ அல்லது திருமணம் ஆகும் போதோ அந்த சேமிப்பு கணக்கலுள்ள மொத்த தொகையை எடுத்து விட்டு கணக்கை முடித்துவிடலாம்.

பாரதிய ஜனதா கட்சியையும், பாரத பிரதமர் நரேந்திர மோடியையும் மதவாதிகள் எனக் கூறும் சில அரசியல் கட்சிகளோ, ஊடகங்களோ இதனை அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கான சட்டம் ஒரு பிரிவினருக்கு மட்டுமல்ல, எல்லா பிரிவினில் உள்ள பெண்களுக்கு இந்த சட்ட திட்டங்கள் போய் சேரும்.

இஸ்லாமிய பெண்களுக்கான முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்தவர். நமது மோடி அவர்கள் தான். இஸ்லாமிய பெண்களுக்கு பல வண்கொடுமைகளை நடந்தது. கணவன், மனைவி வாழ்வில் கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் மத வழக்கப்படி தலாக் என்று மூன்று முறை கணவன் கூறினால், மனைவியை பிரிந்து வேறொரு பெண்ணை மணக்கலாம். இதனால் அந்தப் பெண்ணிற்கு வாழ்வு பறிக்கப்பட்டு எந்த ஒரு பண உதவியும் கணவனிடமிருந்து வராத சூழலில் அந்த பெண்ணின் வாழ்வு பரிதாபத்திற்கு உரியதாகிறது. இந்த வழக்கத்தை மாற்றி எல்லா பிரிவினருக்கும் ஒரே சட்டம்தான் என்ற இந்திய திருமண சட்டத்தின்படிதான் அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டும் என்றார் மோடி. இஸ்லாமிய பெண்களும் தன்னுடைய மகளாக மனதில் கொண்டு இந்த முத்தலாக் தடை சட்டத்தை 2019 ஜூலை 25ம் தேதி இந்திய மக்களவையிலும், 30ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
பெண் மாணவிகளுக்கான சிறப்புத் திட்டத்தைக் கொண்டு வந்ததார்.

பள்ளிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்தார். அவர்கள் பட்டப்படிப்பு மேற்கொள்ள பல பயிற்சி வகுப்புகள், ஆன்லைன், ஆஃப் லைன் பயிற்சி முகாம்கள் போன்றவற்றை இலவசமாக வழங்கினார்.
சிறுதொழில் மற்றும் பெருதொழில் செய்யும் பெண்களுக்கு பல நல உதவிகளை வழங்கினார். 10 லட்சம் முதல் 1 கோடி வரை வங்கி கடன் வழங்குதல் கல்விக் கடன் மற்றும் நடப்பு மூலதன்ம் உள்ளிட்ட திட்ட செலவின் 75.6 சதவீதம் அதிகப்பட்சம் MCLR+3% சதவீத வட்டி வீதத்துடன் கூட்டுக்கடன் வழங்குதல் போன்றவையாகும்.

இவ்வாறக பெண்கள் முன்னேற்றத்தில் மிக கவனத்துடன் பல உதவி திட்டங்களை அமுல்படுத்தி அவர்களின் வாழ்வை செம்மை படுத்தியவர். இதனால் பாரத நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்கள் மனதிலும் பாசத்திற்குரிய தந்தையாக வீற்றிருப்பவர் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே!


Share it if you like it