பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து!

பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து!

Share it if you like it

ஒடிஸா மாநிலத்திலுள்ள பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்ட விழா இன்று கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இத்தரிவிழா சிறப்படைய பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகேயுள்ள புரியில், புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலின் தேர்த்திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. இத்திருவிழா 42 நாட்களுக்கு நடக்கும் மிக நீண்ட திருவிழாவாகும். பிரகாசமான வண்ணங்கள், உற்சாகமான மக்கள், நெரிசலான கடைகள் மற்றும் மகிழ்ச்சியான கைவினைஞர்கள் உள்ளிட்ட ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். கொரோனா காரணமாக இத்திருவிழா கடந்த இரண்டு ஆண்டுளாக நடைபெறவில்லை. நிகழாண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தேரோட்ட விழாவில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா ஆகிய தெய்வங்கள் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வரும்.

இத்திருவிழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் பாரத பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், “தேரோட்டத்தின் சிறப்பு நாளுக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஜெகந்நாதரின் நிலையான ஆசீர்வாதத்திற்காக நாம் பிரார்த்தனை செய்வோம். நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார். முன்னதாக, தேர்திருவிழாவை முன்னிட்டு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஒடிஸா ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.


Share it if you like it