விருதுநகரில் களமிறங்கும் ராதிகா : சிதம்பரத்தில் களமிறங்கும் பி.கார்த்தியாயினி !

விருதுநகரில் களமிறங்கும் ராதிகா : சிதம்பரத்தில் களமிறங்கும் பி.கார்த்தியாயினி !

Share it if you like it

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

திருவள்ளூர் (தனி) – பொன்.பாலகணபதி
வட சென்னை – பால் கனகராஜ்
திருவண்ணாமலை – அஸ்வத்தாமன்
நாமக்கல்ல் – கே.பி.ராமலிங்கம்
திருப்பூர் – ஏ.பி.முருகானந்தம்
பொள்ளாச்சி – கே.வசந்தராஜன்
கரூர் – வி.வி.செந்தில்நாதன்
சிதம்பரம் (தனி) – பி.கார்த்தியாயினி
நாகப்பட்டினம் (தனி) – எஸ்ஜிஎம் ரமேஷ்
தஞ்சாவூர் – எம்.முருகானந்தம்
சிவகங்கை – தேவநாதன் யாதவ்
மதுரை – இராம சீனிவாசன்
விருதுநகர் – ராதிகா சரத்குமார்
தென்காசி (தனி) – ஜான் பாண்டியன்
புதுச்சேரி – நமச்சிவாயம்

இதற்கு முன், நேற்று வெளியிடப்பட்ட 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தில் போட்டியிடும் 9 பேர் இடம்பெற்றிருந்தனர். அதன் விவரம்: தென்சென்னை – தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி – நரசிம்மன், நீலகிரி (தனி) – எல்.முருகன், கோவை – அண்ணாமலை, நெல்லை – நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி-பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் – ஏ.சி.சண்முகம், பெரம்பலூர்-பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *