லோக்சபா தேர்தலில் ஏற்கனவே கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபெரெலி தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிட்டிங் எம்.பி.,யாக வயநாட்டில் மீண்டும் போட்டியிடுகிறார் ராகுல். இதற்கான ஓட்டுப்பதிவு கடந்த ஏப்.26ல் நடந்தது. இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுவதால் ராகுல் வெற்றி பெறுவது கொஞ்சம் ‘ டப் ‘ ஆகவே உள்ளது. இடதுசாரி சார்பில் ஆனி ராஜா, பா.ஜ.க சார்பில் அம்மாநில தலைவர் சுரேந்திரன் தற்போது நல்ல ஓட்டு பெறுவார்கள் என்ற நிலையில் ராகுல் வெற்றி சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது. இதனால் தன்னை பாதுகாத்திடவே ஏற்கனவே சோனியா போட்டியிட்ட ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார்.
சிட்டிங் எம்.பி.,யாக வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் மீண்டும் மற்றொரு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்று மக்கள் குழம்பி உள்ளது. ஒருவேளை வயநாட்டில் தோற்று விட்டால் சொந்த தொகுதியிலே ராகுல் தோற்றுவிட்டார் என்று கேலி செய்வார்களோ என பயந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடுகிறாரோ ? இவ்வாறு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.