காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு, கேரள மாநில ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில், தொடங்கி காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரா (இந்திய ஒற்றுமை நடைபயணத்தை) எனும் பெயரில் நடை யாத்திரையை மேற்கொண்டு இருக்கிறார். அந்த வகையில், 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்ல இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
நாடு முழுவதும் நடக்கும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாற்று இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுதவிர, காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை தொடர்ந்து இழந்து வருகிறது. இதனால், ஐ.சி.யூ-வில் இருக்கும் கட்சியை மீட்கும் விதமாகவும், அடுத்த காங்கிரஸ் தலைவராக தாம் வரவேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி நடத்தும், நாடகமே இந்த நடைபயணம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், சி.பி.ஐ.எம் கட்சி, இது பாரத ஒற்றுமைக்கான நடையா? அல்லது தேர்தலுக்கான நடையா? என கேள்வி எழுப்பி இருக்கிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலமான உ.பி.யில் 2 நாட்கள் நடைபயணம், கேரளாவில் மட்டும் 18 நாட்களா? என தனது கண்டனத்தை சி.பி.ஐ.எம் தெரிவித்து இருக்கிறது.