ராகுல் காந்தி மேற்க்கொள்ளும் யாத்திரைக்கு நிதி தர மறுத்த காய்கறி வியாபாரியின் மீது அக்கட்சியை சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், ’பாரத் ஜோடோ யாத்திரா’ எனும் பெயரில் (இந்திய ஒற்றுமை பயணம்) நடைப்பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவு பெறும் விதமாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்வார் என அக்கட்சி மேலிடம் தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில், கேரள மாநிலத்தில் ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் வசூல் வேட்டையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கொல்லம் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியிடம் ரூ.2000 நன்கொடையாக தருமாறு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, அவர் தரமறுத்துள்ளார். இதனால், கடும் கோவமடைந்த அக்கட்சியை சேர்ந்த குண்டர்கள், கடையின் உரிமையாளரை தாக்கி இருக்கின்றனர். இச்சம்பவம், நாடு முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலமான உ.பி.யில் 2 நாட்கள் நடைபயணம், கேரளாவில் மட்டும் 18 நாட்கள் நடைபயணமா? என சி.பி.ஐ.எம் கட்சி ராகுல் காந்தியை அண்மையில் பொரியல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.