கோதுமை கிலோ என்பதற்கு பதிலாக லிட்டர் 22 ரூபாய் என ராகுல் காந்தி பேசிய சம்பவம் நாட்டு மக்களிடையே கடும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
முதல்வர் ஸ்டாலினின் பேச்சு மற்றும் செயல்பாடுகள் தமிழக மக்களை இன்று வரை சிரிக்க வைத்து வருகிறது. இது ஒருபுறம் என்றால், அவருக்கு நான் சளைத்தவன் அல்ல என்பது போல ராகுல் காந்தியின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில், உங்களுக்கு இங்கு விவசாயம் செய்ய முடியவில்லை என்றால், அதோ தெரிகிறதே நிலா அங்கு உங்களுக்கு நிலங்களை நான் வழங்குவேன். நீங்கள் உருளை கிழங்குகளை அங்கு பயிர் செய்யலாம். அதனை, குஜராத்தில் விற்பனை செய்து மகிழ்ச்சியுடன் வாழலாம் என ராகுல் காந்தி பேசியதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணொளி ஒன்று வெளியாகி இருந்தது. இக்காணொளியை, பாகிஸ்தானை சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகர், எழுத்தாளர் என பன்முகதன்மை கொண்ட ஆரிஃப் ஆஜாகியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றாக இருப்பது ராஜஸ்தான். அம்மாநில முதல்வர் அசோக் கெலட் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருக்கிறார்; அதாவது, கோதுமை மாவு கிலோ 22 ரூபாய் என்பதற்கு பதிலாக லிட்டர் 22 ரூபாய் என குறிப்பிட்டு இருக்கிறார். இச்சம்பவம் தான், அம்மாநில மக்களையும் கடந்த இந்தியா முழுவதும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க.வின் பிரதமர் வேட்பாளரின் அறிவுத்திறனை பாருங்கள் மக்களே என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.