காங்கிரஸ் தலைமைக்கு அண்மையில் சில மூத்த தலைவர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக கடிதம் எழுதி இருந்தனர். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
கட்சிக்குள் முறையாக தேர்தல் நடத்தி சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்காவிட்டால் இன்னும் 50 வருடத்திற்கு எதிர்க்கட்சி வரிசையில் தான் காங்கிரஸ் உட்கார நேரிடும் என்று குலாம் நபி ஆசாத் அதிரடியாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இதனை அடுத்து அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம்நபி ஆசாத், போன்ற மூத்த தலைவர்கள் வகித்து வந்த பதவியில் இருந்து அதிரடியாக சோனியா காந்தி நீக்கி இருந்தார்..
இந்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்ற பொழுது.. திரு. ப.சிதம்பரத்தின் மீது ராகுல் காந்தி கோபப்பட்டதாக மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் கருத்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சண்டை. ராகுல் காந்தி கோபப்பட்டார். சிதம்பரம் மீது. சோனியா-பிரியங்கா சமாதானப்படித்தினர் நேற்று ஒரு அசம்பாவிதமின்றி நடந்திட காரணம் ஆன்லைன் வீடியோ மீட்டிங். இன்று ராகுல் கோவையில் நிருபர்கள் இந்த கேள்வி யை கேட்கவேண்டும். @thatsTamil @dinamalarweb
— R. RAJAGOPALAN (@RAJAGOPALAN1951) January 23, 2021