ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்றால் அக்கூட்டணியில் ஆம் ஆத்மி இருக்காது என டெல்லி முதல்வர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வண்ணம் எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பல்வேறு சிறிய கட்சிகள் கூட்டணி அமைக்கும் முடிவில் இறங்கியுள்ளன. அதன்படி, பீகார் மாநிலம் பாட்னாவில் அண்மையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன் நிறுத்தினால் அக்கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம் பெறாது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். கூட்டணி அமைக்கும் முன்பே டெல்லி முதல்வர் அணுகுண்டை வீசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.