பஞ்சாப் முன்னாள் முதல்வர், ராகுல் காந்தியை விமர்சனம் செய்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், கட்சியின் தலைமை பதவிக்கு வந்த பின்பு அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக, அக்கட்சியின் முன்னோடிகள் பலர் காங்கிரஸை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் கூட காங்கிரஸை விட்டு ஒட்டம் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, சமீபத்தில் அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். இப்படியாக, காங்கிரஸ் கட்சி மெல்ல மெல்ல தேய்ந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ராகுல் காந்தியை வெளுத்து வாங்கி இருக்கிறார். அதாவது, ராகுல் காந்தியை சுற்றி துதிப்பாடிகள் உள்ளனர். அதன்காரணமாகவே காங்கிரஸ் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால்தான் பல தலைவர்கள் காங்கிரஸை விட்டு வெளியேறி வருகின்றனர் என மிக கடுமையாக சாடியிருக்கிறார்.