இந்திய ராணுவ வீரர்கள் குறித்து ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டிற்கு அருணாச்சல பிரதேச மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி. இவர், தேர்தல் நேரங்களை தவிர பெரும்பாலான நேரங்களில் இத்தாலி, தாய்லாந்து, உள்ளிட்ட நாடுகளுக்கு இன்ப சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டவர். எதிர்வரும், 2024 – ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது இந்திய ஒற்றுமை பயணம் எனும் நாடகத்தை ராகுல் காந்தி அரங்கேற்றி வருகிறார்.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் எனும் இடத்தில் சீன ராணுவ வீரர்கள் ஊடுறுவ முயன்றனர். இதையடுத்து, களத்தில் இறங்கிய இந்திய ராணுவம், சீன வீரர்களுக்கு மறக்க முடியாத பதிலடியை கொடுத்தன. இந்தியாவின், இந்த வீரதீர செயலுக்கு உலக நாடுகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து இருந்தன. எனினும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க.வையும், மோடியையும் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இதற்கெல்லாம், ஒருபடி மேலே சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, அருணாச்சல பிரதேசத்தில் நமது ராணுவ வீரர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பொய்யான தகவலை கூறியிருக்கிறார். இவரின், கருத்து ஒட்டு மொத்த இந்திய ராணுவத்தையும், நமது வீரர்களின் வீரத்தையும் இழிவுபடுத்துவது போல அமைந்துள்ளது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த தவாங் பகுதியை சேர்ந்த மக்கள் ராகுல் காந்தியை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.